நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: கோவை காரமடை அருகே சுண்டக்கொ ரையை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவர் தனது ஆடுகளை பட் டியில் நேற்று முன் தினம் இரவு அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டவே, பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு ஆடு கொல்லப்பட்டு இறந்து கிடந்தது. மற்றொரு ஆட்டை சிறுத்தை கவ்வி கொண்டு சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரமடை வனச்சரகருக்கு தகவல் அளித்தார். பின் சம்பவ இடத்திற்கு காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்து வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.