தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொப்பளநோய் தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிப்பு

கொப்பளநோய் தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிப்பு

கொப்பளநோய் தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிப்பு


UPDATED : நவ 15, 2026 04:20 PM

ADDED : நவ 15, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 04:20 PM ADDED : நவ 15, 2026 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் கொப்பள நோய் தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.

இங்குள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையத்தில் விற்பனைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை என்றாலும், தேயிலைச் செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலை உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறையில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் கடும் வெயிலும் நிலவுவதால், தேயிலை செடிகள் கொப்பளநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேயிலை செடிகளை பாதுகாக்கும் வகையில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.

தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில் இந்த ஆண்டு முன் கூட்டியே பருவமழை பெய்வதால், தேயிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது. மழைப்பொழிவு குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், கொப்பளநோய் தாக்குதலால் செடிகள் துளிர்விட முடியாத நிலை உள்ளது.

பனிப்பொழிவு அதிகரித்தால், செடிகள் முற்றிலுமாக கருகி உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. குளிர்ந்த காலநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் நோய் பரவல் அதிகரித்துள்ளது. கொப்பள நோயிலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க மருந்து தெளிக்கும் பணியும் நடக்கிறது.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us