ADDED : ஜன 14, 2025 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:
அன்னுாரில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில், இலவச மருத்துவ முகாம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், 150 பேருக்கு, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.
'தொற்றா நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும்,' என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இதில் தொழுநோய் பரவுவது குறித்தும், தொழு நோயாளிகளுக்கு அரசு அளிக்கும் இலவச சிகிச்சை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள்,செவிலியர்கள் பங்கேற்றனர்.