/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் கணக்கெடுப்பு களப்பணி இன்று துவக்கம்
/
தொழுநோய் கணக்கெடுப்பு களப்பணி இன்று துவக்கம்
ADDED : அக் 23, 2025 11:39 PM
கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தொழுநோய் கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது. நவ. 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
காரமடை, தாளியூர், எஸ்.எஸ்.குளம், புளூவாப்பட்டி, நல்லாட்டிபாளையம், ஆனைமலை ஆகிய ஆறு வட்டாரங்களில் 2,05,617 வீடுகள் நேரடியாக கண்காணிக்கப்படும். இதற்காக 367 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். தோல் சார்ந்த எவ்வித பாதிப்பு இருந்தாலும், களப்பணியாளர்களிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். வீடுவீடாக வரும் கள பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து, உடல் பாதிப்பு சார்ந்த தகவல்களை தயங்காமல் அளிக்கவேண்டும் என மருத்துவ பணிகள் துணை இயக்குனர் சிவகுமாரி தெரி வித்துள்ளார்.

