/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பூக்களோடு மணக்க, மணக்க தினமும் நகர்கிறது வாழ்க்கை'
/
'பூக்களோடு மணக்க, மணக்க தினமும் நகர்கிறது வாழ்க்கை'
'பூக்களோடு மணக்க, மணக்க தினமும் நகர்கிறது வாழ்க்கை'
'பூக்களோடு மணக்க, மணக்க தினமும் நகர்கிறது வாழ்க்கை'
ADDED : செப் 28, 2025 05:47 AM

பூமாதிரி இருக்காது வாழ்க்கை. சில சமயம் கடினமாக, வேறு பல சமயம், வித்தியாசமான அனுபவங்களோடு இருக்கும். சவால் இல்லாமல் வாழ்க்கை என்றைக்குமே, 'மணக்காது' என்கிறார், சுந்தராபுரம் முத்தையா நகரை சேர்ந்த கிருஷ்ணன். வயது 59 ஆகிறது. 40 வருடங்களாக பூ வியாபாரம் செய்கிறார்.
உங்கள் ஒரு நாள் பயணம் எப்படி இருக்கும்?
தினமும் காலையில் பூ மார்க்கெட்டுக்கு சென்று, பூக்கள் வாங்கி வந்து, சுந்தராபுரம், முத்தையா நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஒவ்வொரு இடமாக சென்று, வியாபாரம் செய்வது வழக்கம். முகூர்த்த நாட்களில், அதிகமாக விற்பனையாகும். பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நாளுக்கு, செலவுகள் போக, எப்படியும் 500 முதல் 600 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
பூர்த்தியாகாத ஆசை ஏதேனும் உண்டா?
பெரிய ஆசைகள் என்று எதுவும் கிடையாது. இந்த வருமானத்தை வைத்து தான், என்னுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கும் திருமணம் நடத்தி வைத்தேன். ஒரு பையன் ஓட்டுநராக இருக்கிறார். இந்த வருமானமே போதும். தினமும், ஒவ்வொரு பகுதிக்கு செல்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. ஒரு தொழிலில் ஈடுபட்டால், முழு கவனமும் அதில் இருக்க வே ண்டும். எனக்கு தெரிந்தது இது மட்டுமே. அதனால், சிந்தனை வேறெங்கும் போனது கிடை யாது. இந்த பூக்களோடு வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது.