/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா
/
தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா
ADDED : நவ 17, 2025 12:10 AM
கோவில்பாளையம்: கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை சோதி மைய அறக்கட்டளை சார்பில், இலக்கிய விழா கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்றார்.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பாலுசாமி தலைமை வகித்து பேசுகையில், ''பல மொழிகளை ஆவலோடு கற்கலாம். ஆனால் உயிர் மூச்சு தமிழாக இருக்க வேண்டும்,'' என்றார்.' படித்ததில் பிடித்தது' என்ற தலைப்பில், முனைவர் நஞ்சையன், சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியின் பண்பு நலன்கள் குறித்து பேசினார். தமிழின் சிறப்பு பற்றி பேராசிரியர் முகம்மது ஆரிப் பேசினார்.
முனைவர் பாலதண்டாயுதம், 'ஆற்றின் அளவறிந்து கற்க,' என்னும் தலைப்பில் பேசுகையில், ''படிப்பை பழக்கப்படுத்த வேண்டும். படிப்பை நேசித்தால் வாழ்வில் உயரலாம். எந்த துறையில் சாதிக்க விரும்புகிறீர்களோ, அந்த துறை குறித்து ஆயிரம் கருத்துக்கள் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார். வள்ளலார் உலகிற்கு செய்தது சமய புரட்சியே, சமுதாய புரட்சியே, என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

