/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கால்நடைகளுக்கு அதிக தீவனம் அவசியம்'
/
'கால்நடைகளுக்கு அதிக தீவனம் அவசியம்'
ADDED : மே 17, 2025 01:16 AM
அன்னுார்: அன்னுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத் தில், 'அட்மா' திட்டத்தின் கீழ், கறவை மாடுகளுக்கான, தீவன மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார்.
வேளாண் அலுவலர் சுகன்யா தலைமை வகித்தார்.
கால்நடை மருத்துவ பல்கலை பேராசிரியர் ஆறுமுகம் பேசுகையில், ''பால் கறக்கும் மாடுகளுக்கு எந்த அளவு தீவனம் அளிக்கிறோமோ, அந்த அளவு பால் கிடைக்கும்.
''புண்ணாக்கு போன்ற புரத சத்து உள்ளவைகளுடன் தவிடு, தானியம் ஆகியவற்றையும் கலந்து சரிவிகித உணவு வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்கு உலர் தீவன அளவு அதன் உடல் எடையில் மூன்று சதவீதமாகும். அதிக உற்பத்தி திறன் கொண்ட மாடுகளுக்கு மேலும் அதிக அளவில் தீவனம் தரலாம்,'' என்றார்.
துணை வேளாண் அலுவலர் ராஜன், உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.