/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நுால் வசிப்பு மனிதனை செம்மைப்படுத்தும்!'
/
'நுால் வசிப்பு மனிதனை செம்மைப்படுத்தும்!'
ADDED : ஏப் 18, 2025 11:05 PM

பொள்ளாச்சி: நுாலகங்கள், ஒரு மனிதனை செம்மைப்படுத்துவதுடன், சீரிய வழியைக் காட்டும், என, தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில், 'மண் பயனுற வேண்டும்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி வர்த்தக சபைத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். கம்பன் கலை மன்ற துணைச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். புலவர் ராமச்சந்திரன், வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், தேசிய முதியோர் பளு துாக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்த கிட்டம்மாளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் நாராயணமூர்த்தி பேசுகையில், ''இளைய தலைமுறையினர், சங்க கால புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவை பெரும்பாலும் அறத்தையே போதிக்கின்றன. நன்றி மறவாமல் அறத்துடன் வாழ்தல் அவசியம். நுால்கள் வாசிப்பு ஒரு மனிதனை செம்மைப்படுத்தும், சீரிய வழியைக் காட்டும், சிறப்பான வாழ்வைக் கொடுக்கும்,'' என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கம்பன் கலைமன்ற தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

