/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தல் பணி 'விறுவிறு' தொகுதி வாரியாக மண்டல குழுக்கள்
/
லோக்சபா தேர்தல் பணி 'விறுவிறு' தொகுதி வாரியாக மண்டல குழுக்கள்
லோக்சபா தேர்தல் பணி 'விறுவிறு' தொகுதி வாரியாக மண்டல குழுக்கள்
லோக்சபா தேர்தல் பணி 'விறுவிறு' தொகுதி வாரியாக மண்டல குழுக்கள்
ADDED : பிப் 18, 2024 12:30 AM
கோவை:கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் மேற்கொள்ள, சட்டசபை தொகுதி வாரியாக மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும், 28ம் தேதிக்குள் தேர்தல் முன்னேற்பாடுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், வரும், 23ல் தமிழகம் வருகின்றனர். தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, 28ம் தேதிக்குள் முடிக்க, தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சட்டசபை தொகுதி வாரியாக பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, புள்ளியியல் சர்வே குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜோனல் டீம் அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் துவக்கப்பட்டு இருக்கின்றன.
அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் பிப்., இறுதிக்குள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இம்மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை, இரு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.
அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி சார்பான விளம்பரங்கள், போஸ்டர்கள், கொடிக்கம்பங்கள் அகற்ற குழுக்கள் அமைத்து, தயாராக இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவித்ததும், நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அப்போது, இவற்றை அகற்ற வேண்டும் என, தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் புள்ளியியல் சர்வே குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இக்குழுக்கள் செயல்பாட்டுக்கு வரும். தற்போது முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் என்னென்ன வாகனங்கள் இருக்கின்றன; பணிபுரியும் அதிகாரிகள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
-- கிராந்திகுமார், கோவை கலெக்டர்