/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்
/
எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 20, 2025 01:23 AM
தொண்டாமுத்துார் : மாதம்பட்டியில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரியை, வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக கனிம வளங்கள் திருடப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்பகுதியில், கனிமவள திருட்டை தடுக்கும் வகையில், வருவாய்த்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, தொண்டா முத்தூர் வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான, வருவாய்த்துறையினர், மாதம்பட்டி, சிறுவாணி மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதிசீட்டு இல்லாமல், எம் சாண்ட் ஏற்றி வந்தது தெரியவந்தது. வருவாய்த்துறையினர் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, பேரூர் போலீசில் ஒப்படைத்தனர். வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.