/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து குறைவு; விலையும் உயர்ந்தது
/
வாழைத்தார் வரத்து குறைவு; விலையும் உயர்ந்தது
ADDED : ஜன 08, 2024 01:18 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்து காணப்பட்டதால், விலை உயர்ந்தது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரம்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது.
கோபி, உடுமலை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற வெளி மாவட்டங்கள்; ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, நஞ்சேகவுண்டன்பாளையம், சிங்காநல்லுார், தொப்பம்பட்டி போன்ற பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
ஏலத்தில், வியாபாரிகள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.விசேஷ நாட்களில், பழங்களின் தேவை அதிகம் உள்ளதால், இவற்றின் வரத்தும் அதிகரிப்பதுடன், விலையும் உயர்ந்து காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. மார்க்கெட்டில், ஒரு கிலோவுக்கு பூவம்பழம் 30 ரூபாய், கற்பூர வள்ளி, 28, செவ்வாழை - 53, மோரிஸ் - 25, நேந்திரம், 35 மற்றும் கதளி, 35 ரூபாய்க்கும் ஏலத்துக்கு போனது.
வாழைத்தார் வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கமாக சந்தைக்கு 2,000 வாழைத்தார் வரத்து இருக்கும். தற்போது,துாத்துக்குடி பகுதியில் வெள்ள பாதிப்பால், வரத்து இல்லை. உள்ளூர் வரத்து மட்டுமே உள்ளதால் வரத்து குறைந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில், 1,500 வாழைத்தார் மட்டுமே வந்தது. வரத்து குறைவு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கடந்த வாரத்தை விலை உயர்ந்து காணப்பட்டது,' என்றனர்.