/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்திர கிரகணம் கோவையில் தெரியவில்லை
/
சந்திர கிரகணம் கோவையில் தெரியவில்லை
ADDED : செப் 08, 2025 06:26 AM

கோவை; கோவையில், மேகமூட்டத்தால், சந்திர கிரகணம் தெரியாததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
சந்திர கிரகணம் இந்தியாவில் நேற்று நள்ளிரவில் நிகழ்ந்தது. வானத்தில் காப்பர் சிவப்பு நிறத்தில் நிலா தோன்றியது. நேற்று இரவு, 8:58 முதல் இன்று அதிகாலை, 2:25 வரை, சந்திர கிரகணம் நடந்தது. இந்த சந்திர கிரகணத்தில், நிலா, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என, தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கோவை மண்டல அறிவியல் மையத்தில், சிவப்பு நிற நிலவை, தொலைநோக்கி மூலம் காணலாம் என, அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கோவை மண்டல அறிவியல் மையத்தில், தொலைநோக்கி மூலம் நிலவை காண, பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக, கோவையில் எந்த பகுதியிலும் நிலவு தெரியவில்லை.
இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.