/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயந்திர உதிரி பாகம் திருடியவர்கள் கைது
/
இயந்திர உதிரி பாகம் திருடியவர்கள் கைது
ADDED : ஜூன் 26, 2025 09:59 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் கோழி தீவன நிறுவனத்தில், இயந்திர உதிரி பாகத்தை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் கோழி தீவன நிறுவனத்தில் உள்ள பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்ய, சூலக்கல்லை சேர்ந்த சுரேஷ், 36, கோவிந்தாபுரத்தை சேர்ந்த கவுதம், 22, மற்றும் தேவராயபுரத்தை சேர்ந்த நாகேந்திரன், 20, ஆகிய மூவரும் வந்தனர்.
அப்போது, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திர உதிரி பாகத்தை தனியாக கழட்டி திருடி சென்றனர். இது குறித்து, நிறுவனம் சார்பில் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, இயந்திர உதிரி பாகத்தை திருடிய மூவரையும் கைது செய்தனர்.