/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை குறுமைய கோ-கோ; அரசு பள்ளி மாணவர்கள் 'மாஸ்'
/
மதுக்கரை குறுமைய கோ-கோ; அரசு பள்ளி மாணவர்கள் 'மாஸ்'
மதுக்கரை குறுமைய கோ-கோ; அரசு பள்ளி மாணவர்கள் 'மாஸ்'
மதுக்கரை குறுமைய கோ-கோ; அரசு பள்ளி மாணவர்கள் 'மாஸ்'
ADDED : ஆக 20, 2025 10:01 PM

கோவை; மதுக்கரை குறு மைய விளையாட்டு போட்டிகளை, ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி நடத்தி வருகிறது.
கற்பகம் பல்கலையில் வாலிபால், வளையப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில் கோ-கோ போட்டிகள் நடந்தன.
20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறுதி போட்டியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம், செட்டிபாளையம் அரசு பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், குளேபால் பாத்வேஸ் பள்ளி முதலிடம், மதுக்கரை அரசு பள்ளி இரண்டாமிடம் வென்றன.
14 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான போட்டியில், பி.எம்.ஜி., பள்ளி முதலிடம், குளோபல் பாத்வேஸ் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான போட்டியில், பி.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி முதலிடம், மதுக்கரை அரசு பள்ளி இரண்டாமிடம், 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான போட்டியில் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் பள்ளி முதலிடம், பி.எம்.ஜி. மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.