/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுரை வீரன் கோவில் திருவிழா துவக்கம்
/
மதுரை வீரன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 28, 2025 04:00 AM

வால்பாறை: மதுரை வீரன் சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை அடுத்துள்ளது ரொட்டிக்கடை பாறைமேடு. இங்குள்ள கணபதி, மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், பட்டத்தரசி, நாகம்மாள் ஏழுகன்னிமார் அம்மன் கோவில், 101ம் ஆண்டு திருவிழா நேற்று முன் தினம் காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் மாலை, 6:30 மணிக்கு அறங்காவலர் அசோக், தர்மகர்த்தா வேல்முருகன் ஆகியோர் திருக்கொடியை ஏற்றினர்.
முன்னதாக சுவாமிக்கு காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 8:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.
விழாவில் மே 8ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு, 10:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்துவரும் நிகழ்ச்சியும், 10ம் தேதி மாலை, 3:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் இடம்பெறுகிறது.
வரும், 16ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தலைவர் ராமன், செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் செல்வன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

