/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம்
/
சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம்
ADDED : செப் 03, 2025 11:08 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் வரும், 11ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையத்தில் விநாயகர், சக்திமாரியம்மன், முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் வரும், 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, வரும், 9ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு வாஸ்துசாந்தியுடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது.
வரும், 10ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், முளைப்பாலிகை, தீர்த்தகலசம் அழைத்து வருவதல், கோபுர கலசம் வைத்தல் மற்றும் மண் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, முதற்கால யாக வேள்வி, விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கும்ப பூஜை, கும்ப அலங்காரம், திருக்குடங்கள் கோவிலைச் சுற்றி வருதல், கலசங்களை யாகசாலையில் நிறுவுதல், 108 மூலிகை பொருட்களை குண்டத்தில் சமர்ப்பித்தல் நடக்கிறது.
வரும், 11ம் தேி காலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, விநாயகர் பூஜை, வேதிகார்ச்சனை, ஹோமங்கள், காலை, 9:05 மணிக்கு மகாபூர்ணாஹுதி, யாத்தரதானம், கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல்; காலை, 9:30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், காலை, 10:30 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, மகா அபிேஷகம், கோ பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.