/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வ சித்தி விநாயகருக்குமஹா கும்பாபிஷேகம்
/
சர்வ சித்தி விநாயகருக்குமஹா கும்பாபிஷேகம்
ADDED : நவ 28, 2025 05:12 AM

கோவை: பீளமேடு அண்ணா நகர் பி.பி.எஸ்., காலனியிலுள்ள சர்வ சித்தி விநாயகர் பூவை ஈஸ்வரர் ஸ்ரீகால பைரவர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
நேற்று முன் தினம் காலை ஸ்ரீ விநாயகர் பூஜை, அனுக்ஞை, புன்யாகவாசனம், வாஸ்துபூஜை, காப்பு கட்டுதல், கலச ஸ்தாபனம் நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால பூஜை, மஹாபூர்ணாஹூதி, நாடி சந்தானம், யாத்ரதானம், மகாதீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களை சுமந்து கோபுரங்களுக்கு எழுந்தருளுவித்தனர். அங்குள்ள கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு புனித தீர்த்தங்களை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

