/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு விருது
/
மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு விருது
ADDED : ஜூலை 08, 2025 09:02 PM

பொள்ளாச்சி; 'கிரேட் பிளேஸ் ஆப் ஒர்க்' என்ற உலகளாவிய அமைப்பில், என்.ஐ.ஏ., நிறுவனங்களின் ஓர் அங்கமான, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி, இந்தியாவின் சிறந்த நடுத்தர அளவிலான வேலை நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த மாதம், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், உயரிய விருதான'கிரேட் மிட் சைஸ் ஒர்க் பிளேஸ்' என்ற விருதை பெற்றார்.
விருது பெற்ற தாளாளர், ''ஒரு சிறந்த பணியிட சூழலை உருவாக்கும் விதத்தில், ஒவ்வொரு ஊழியரின் பங்களிப்பு முக்கியமானது. நமது வெற்றி, நமது ஊழியர்களின் பங்களிப்பும் முக்கியமானது,'' என்றார்.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் முதன்மை ஆலோசகர் கார்த்திக்கேயன், இணை செயலர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

