/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்காச்சோள சாகுபடி; விவசாயிகளுக்கு பயிற்சி
/
மக்காச்சோள சாகுபடி; விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : டிச 15, 2024 11:33 PM

சூலுார்; மக்காச்சோள சாகுபடியில், பூச்சி தாக்குதலை தடுத்தல், நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சுல்தான்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ், மக்காச்சோள சாகுபடியில், பூச்சி தாக்குதலை தடுக்கும் முறைகள், நோய் மேலாண்மை குறித்து, போகம்பட்டி, வடவள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குனர் சாமுவேல் மோகன்ராஜ், விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அங்கக விவசாயம் செய்யும் முறைகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டன. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. அட்மா திட்ட மேலாளர் ராஜேந்திரன், உதவி அலுவலர் ரமேஷ், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.