/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் மலேசிய அமைச்சர் வழிபாடு
/
மாசாணியம்மன் கோவிலில் மலேசிய அமைச்சர் வழிபாடு
ADDED : ஜன 09, 2024 01:11 AM

பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மலேசிய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு, நேற்று இரவு மலேசிய தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் சரஸ்வதி குடும்பத்துடன் வந்தார்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அமைச்சரை வரவேற்றார். தொடர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று, குடும்பத்தினருடன் அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தினர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, தங்கத் தேரை பார்வையிட்டு, புகைப்படம் எடுத்தார்.
சுவாமி தரிசனம் முடிந்ததும், கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தமிழில் நன்றி தெரிவித்தார்.