/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் டென்னிஸ் போட்டியில் அசத்தல்
/
மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் டென்னிஸ் போட்டியில் அசத்தல்
மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் டென்னிஸ் போட்டியில் அசத்தல்
மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் டென்னிஸ் போட்டியில் அசத்தல்
ADDED : டிச 01, 2024 11:04 PM

கோவை; டென்னிஸ் போட்டியில், மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
பள்ளிகளுக்கு இடையேயான அரசு குறுமைய விளையாட்டு போட்டிகள், நீலாம்பூரில் உள்ள கே.பி.ஆர்., கல்லுாரியில் நடைபெற்றன.
இங்கு வாலிபால், டென்னிஸ், கபடி கோ கோ, உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை காட்டினர்.
டென்னிஸ் போட்டியில், 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அமர்நாத் 3-2 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது இடத்தை பிடித்தார். 19 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவிலும், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அமர்நாத் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர், 4-2 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அமர்நாத் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில், 4வது இடத்தை பிடித்தார். இதன் வாயிலாக மாணவர்கள் இருவரும் மாநில அளவிளான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும், கடந்த ஆண்டு நடந்த விளையாட்டு போட்டியிலும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் தொடர் சாதனையை, பயிற்சியாளர் பாலாஜி கண்ணபிரான் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.