/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டு உடைத்து திருடியவர் கைது
/
பூட்டு உடைத்து திருடியவர் கைது
ADDED : ஆக 21, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடை பெள்ளாதியை சேர்ந்தவர் விஜயகுமார், 40. தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அப்போது சமையலறையில் இருந்து ஒருவர் வெளியே ஓடி தப்பிக்க முயன்றார்.
விஜயகுமாரும், அவரது மனைவியும் அந்த ஆசாமியை துரத்தி பிடித்து காரமடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சன்னியா 32,என்பதும் காரமடை தேக்கம்பட்டியில் தற்போது வசித்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்து வீட்டில் திருடிய ரூ.650 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

