/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எரிசாராயம் பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
/
எரிசாராயம் பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஏப் 25, 2025 11:15 PM
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திடீர் சோதனையில், 5,145 லிட்டர் எரி சாராயம் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜூகுமார்,48, கைது செய்தனர். விசாரணையில், அவர் கேரளாவில் உள்ள கள்ளுகடைகளில் உள்ள கள்ளில், பதுக்கி வைக்கப்பட்ட எரிசாராயத்தை கலக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரையின்படி, எரிசாராயம் பதுக்கிய பிஜூகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

