/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் மைதானத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்
/
கிரிக்கெட் மைதானத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்
ADDED : ஜூலை 01, 2025 12:12 PM
வடவள்ளி:
வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
வடவள்ளி, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 27; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த, 10 மாதங்களுக்கு, முன்பு திருமணம் ஆனது. இவரது மனைவி சுருதி கர்ப்பிணியாக உள்ளார்.
ஹரிஹரன், வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம், வழக்கம் போல, வடவள்ளி, சிறுவாணி ரோட்டில் உள்ள மைதானத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார்.
விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஹரிஹரன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், ஹரிஹரனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே ஹரிஹரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.