தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
UPDATED : நவ 02, 2026 08:41 PM
ADDED : நவ 02, 2026 08:37 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: கே.என்.ஜி.புதூரை சேர்ந்தவர் சரவணன்,57.
இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், உலியம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு மரம் ஏறும் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு 30 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறும்போது, தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
