UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 09:25 PM
அ நிறம் | அளவு
கோவை: கூட்டுறவு துறை சார்பில் 10 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகள் அல்லாமல் அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், வடுகபாளையம், மகாலிங்கபுரம், வால்பாறை, சூலூர், இருகூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை மற்றும் தொடக்க கூட்டுறவின் விற்பனை மையங்களில் இத்தொகுப்பு கிடைக்கிறது.
