ADDED : டிச 11, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: சீரபாளையம், கற்பக விநாயகர் கார்டனை சேர்ந்தவர் பரமேஸ்வரி, 37. இவரது கணவர் பாலுசாமி, 41. கடந்த இரு மாதங்களுக்கு முன் காணாமல் போனார். பரமேஸ்வரி புகாரில், மதுக்கரை போலீசார் விசாரித்தனர்.
பாலுசாமி ஈச்சனாரி அருகே முத்து நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மழைநீர் வடிகாலிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. அங்கு வசித்த மதுரையை சேர்ந்த மகாலிங்கம், 55, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகுதியை சேர்ந்த மோகனா, 39 ஆகியோர் பாலுசாமியை கொலை செய்து, நகை, மொபைல்போனை திருடியது தெரிந்து கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். கொலை நடந்தது சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதி. இதையடுத்து, மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனிலிருந்த வழக்கு, சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.

