/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுபாட்டில்கள் பதுக்கிய நபருக்கு சிறை தண்டனை
/
மதுபாட்டில்கள் பதுக்கிய நபருக்கு சிறை தண்டனை
ADDED : மே 13, 2025 11:52 PM
கோவை; சட்ட விரோதமாக விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களாக, அரசு அனுமதித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யும் நபர்கள், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், காலை, 7:40 மணிக்கு கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் செங்குளம் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, டாஸ்மாக் மதுக்கடை அருகில் ஒரு நபர் , மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்த 80 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 3,560 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, பாட்டில்களை பதுக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், 24 என்பரை கைது செய்தனர். பின்னர், மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.