/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கோலாகலம்
/
ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கோலாகலம்
ADDED : டிச 24, 2024 07:00 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில், மண்டல மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் காரமடை சாலை சிவன்புரத்தில், ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப சேவா சமிதியின் சார்பில், ஆண்டு விழாவும், மண்டல மகோற்சவ விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு மண்டல மகோற்சவ விழா கடந்த, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று இரவு பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோவை யாழினி இசைக் குழுவினர் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமி பள்ளி உணர்த்தலை அடுத்து, சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
அடுத்து உச பூஜையும், ஆறட்டும் நடக்கிறது. கோவிலில் உள்ள ஹரிஹரசுதன் பஜனை மண்டபத்தில் அமைந்துள்ள, திருக்குளத்தில் ஐயப்ப சுவாமி நீராடி முடித்த பின், வாத்திய கோஷங்களுடன், சுவாமியை கோவிலுக்கு அழைத்து வர உள்ளனர். அதைத் தொடர்ந்து கொடிக்கல் பறையும், கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. பகல், 11:00 மணிக்கு, 25 கலசங்களால் கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு சர்வ ஸ்ரீ ஆறணோட்டுகலா சிவன் மற்றும் குழுவினர் வழங்கும் தாயம்பக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு வாண வேடிக்கையும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் சேவா சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.