/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரட்டுமேடு கோவிலில் இன்று மண்டல பூஜை நிறைவு
/
கரட்டுமேடு கோவிலில் இன்று மண்டல பூஜை நிறைவு
ADDED : ஏப் 25, 2025 11:11 PM
கோவில்பாளையம்: கரட்டுமேடு குமரக் கடவுள் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா இன்று நடக்கிறது.
கோவில்பாளையத்தை அடுத்த கரட்டு மேட்டில், குன்றின் மீது இரத்தினகிரி குமரக் கடவுள் கோவில் உள்ளது.
பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த மார்ச் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா இன்று நடக்கிறது. இன்று காலை பிள்ளையார் வழிபாடு, வேள்வி வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, நடக்கிறது.
காலை 8:00 மணிக்கு ரத்தின விநாயகர், திரிசூல பெருமான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்குட நீராட்டு நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு விநாயகர், உற்சவர் மற்றும் முருகப்பெருமானுக்கு திருக்குட நீராட்டும் பேரொளி வழிபாடும் நடக்கிறது.
சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பங்கேற்கின்றனர்.

