/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக நிபுணர்கள் கைகோர்த்த 'மாஸ்டர்ஸ் கோர்ஸ்-25' மாநாடு
/
உலக நிபுணர்கள் கைகோர்த்த 'மாஸ்டர்ஸ் கோர்ஸ்-25' மாநாடு
உலக நிபுணர்கள் கைகோர்த்த 'மாஸ்டர்ஸ் கோர்ஸ்-25' மாநாடு
உலக நிபுணர்கள் கைகோர்த்த 'மாஸ்டர்ஸ் கோர்ஸ்-25' மாநாடு
ADDED : ஆக 13, 2025 09:54 PM
கோவை; ஆர்த்தோ ஒன் அகாடமி சார்பில் 'ஷோல்டர்ஸ் மாஸ்டர்ஸ் கோர்ஸ்-25' மாநாடு கடந்த, 9, 10ம் தேதிகளில் நடந்தது.
தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட எலும்பியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
இதில், ஆர்த்ரோஸ்கோப்பிக் பாங்கார்ட் ரிப்பெயர், ஆர்த்ரோஸ்கோப்பிக் கிளினாய்ட் மறுகட்டமைப்பு, ரோட்டேட்டர் கப் ரிப்பெயர், ஆர்த்ரோஸ்கோப்பிக் லாடர்ஜெட் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக ஒளிபரப்பபட்டு, விவாதங்களும் நடத்தப்பட்டன.
ஆர்த்தோ ஒன் எலும்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவர் டேவிட் ராஜன் பேசுகையில்,''ஆர்த்ரோஸ்கோப்பிக் மற்றும் திறந்த அறுவை சிகிச்சை முறைகளில், எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நிபுணர்கள் ஆழ்ந்த கவனத்துடன் முடிவு செய்ய வேண்டும். வெறும் அறிவை மட்டுமின்றி, நேரடி அனுபவத்தின் வாயிலாக நடைமுறை திறன்களை வழங்குவதே மாநாட்டின் நோக்கம்,'' என்றார்.
ஆர்த்தோ ஒன் அகாடமிக் இயக்குனர் ஷ்யாம் சுந்தர், கொரியன் பல்கலை பேராசிரியர் ஜே செல் யூ உள்ளிட்டோர் கருத்துகள் தெரிவித்தனர்.