/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு
/
கோவை மாநகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு
ADDED : ஜன 18, 2024 01:31 AM

கோவை : கோவை மாநகர் முழுவதும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும், கும்பாபிேஷக நிகழ்வுகளை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவையிலும் போலீசார், பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள், 4 தனிப்படைகளாக பிரிந்து 24 மணி நேரமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய கோவில்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள், மால்கள், வணிக வளாகங்கள், பூ மார்க்கெட், கோவை அரசு மருத்துவமனை, தியேட்டர்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.