நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, குடிமங்கலம் வட்டார வள மையம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணம் தேவைப்படுவோருக்கு அளவீடு செய்தனர். மொத்தம், 61 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
உபகரணங்கள் இருவருக்கும், புதிய தேசிய அடையாள அட்டை 7; புதுப்பித்தல் 4; இலவச பஸ் பாஸ் மற்றும் ரயில் கட்டண சலுகை 18 பேருக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்தராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.