/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஞ்சேரிபுத்தூரில் நாளை மருத்துவ முகாம்
/
செஞ்சேரிபுத்தூரில் நாளை மருத்துவ முகாம்
ADDED : செப் 19, 2024 10:22 PM
சூலுார் : செஞ்சேரிபுத்தூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், செஞ்சேரிபுத்தூர் எஸ்.என்.எஸ்., சஞ்சீவ் மஹாலில் காலை, 9:00 முதல், 4:00 மணி வரை நடக்கிறது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், பல் மற்றும் கண் மருத்துவம், அறுவை சிகிச்சை நோய் ஆலோசனைகள், முகாமில் வழங்கப்பட உள்ளன.
மேலும், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சித்தா, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. சிறப்பு மருத்துவர்களை கொண்டு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.