/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீடு திட்டம்: முகாமில் விண்ணப்பிக்கலாம்
/
மருத்துவ காப்பீடு திட்டம்: முகாமில் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ காப்பீடு திட்டம்: முகாமில் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ காப்பீடு திட்டம்: முகாமில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 10, 2024 12:32 AM
கோவை;மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டம், சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல், சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் புதிய தொழில் துவங்க கடனுதவி ஆகிய திட்டங்களுக்கான, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
குனியமுத்துார் பகுதியில், 87வது வார்டில், இம்முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. இதே வார்டில் இன்றும் முகாம் நடக்கிறது.
நாளை (11ம் தேதி) 88வது வார்டிலும், நாளை மறுதினம் (12ம் தேதி) 93வது வார்டிலும், 13ம் தேதி 89வது வார்டிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மருத்துவ காப்பீடு அட்டை பெற பொதுமக்கள் விண்ணப்பம் பதிவு செய்யலாம், மகளிர் சுய உதவி குழுவுக்கான பதிவுகள், சிறு குறு நிறுவனங்கள் கடனுதவி பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளலாம்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில், ஒரு குடும்பம் ஓராண்டில் ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். 300க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

