/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம்; கவுன்சிலர்கள் காரசார விவாதம்
/
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம்; கவுன்சிலர்கள் காரசார விவாதம்
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம்; கவுன்சிலர்கள் காரசார விவாதம்
மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம்; கவுன்சிலர்கள் காரசார விவாதம்
ADDED : ஜூன் 13, 2025 10:05 PM

மேட்டுப்பாளையம்; நகராட்சியில் ஊழல் நடந்துள்ளது என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதை அடுத்து, தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர் இடையே, மன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம், தலைவர் மெஹரிபா பர்வின் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அமுதா, துணைத்தலைவர் அருள்வடிவு உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எழுந்து எங்கள் வார்டுகளில், வேலைகள் ஏதும் செய்து தரவில்லை என்றனர். அதற்கு தலைவர் மெஹரிபா பர்வின் உங்கள் வார்டுகளில் பல வேலைகள் செய்து தரப்பட்டுள்ளன. நீங்கள் வேண்டுமென்று பிரச்னை செய்வதற்காக உள்ளீர்கள், என்றார். அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஊழல் அதிகம் நடந்துள்ளது என கூறினர். அதற்கு நகர் மன்ற தலைவர் நீங்களும் தான் ஊழல் செய்துள்ளீர்கள் என்று கூறியதும், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள் எழுந்து வந்து ஊழல் நடந்துள்ளது என கூறியதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். மேலும் அவர்கள் மன்னிப்பு கேட்ட பின், கூட்டத்தை நடத்துங்கள் என, தலைவர் மேஜை முன்பு நின்று சத்தமாக பேசினர். மன்ற கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
இந்நிலையில் மன்ற கூட்டத்தில் பிரச்னைகள் ஏதேனும் ஏற்படுமோ என்ற நிலையை கருத்தில் கொண்டு, நகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.