/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
ADDED : ஜன 31, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;வால்பாறை சோலையாறு அணையில், எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வார்டு செயலாளர் கேசவன் தலைமை வகித்தார்.
கூட்டத்துக்கு அ.தி.மு.க., நகரச்செயலாளர் மயில்கணேஷ், ஏ.டி.பி., மாநிலத்தலைவர் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச்செயலாளர் பொன்கணேஷ் வரவேற்றார்.
வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, எம்.ஜி.ஆர்., மற்றும் லோக்சபா தேர்தல் குறித்து பேசினார். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்துாரி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.