ADDED : அக் 25, 2026 09:05 PM
அ நிறம் | அளவு
கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மாநகர் முழுவதும் இன்று (அக்.,25) பரவலாக கனமழை பெய்தது. அமைச்சர் சம்பத்குமார், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பல பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் வளாகத்தில் கட்டுப்பாட்டு மையம் உள்ளது. மழை பாதிப்பு, நிவாரண பணிகளை அமைச்சர் சம்பத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
