/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாயுமானவர் திட்டத்தில் சிறு மாற்றம்
/
தாயுமானவர் திட்டத்தில் சிறு மாற்றம்
ADDED : அக் 30, 2025 12:30 AM
கோவை: தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கோவை மண்டலத்தில் செயல்படும் 55 அமுதம் ரேஷன் கடைகளில், 70 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது, 60 வயது முதல் 70 வயது கொண்ட முதியவர் இருக்கும் ரேஷன் கார்டுகளையும் சேர்த்து, சேவையை விரிவுபடுத்தவும், மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, மாதத்தின் முதல் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் பயனாளிகள் இல்லத்துக்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கும் பணியை, எவ்வித புகாருமின்றி மேற்கொள்ளவும் அங்காடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

