/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாயமான நபர் காரில் சடலமாக மீட்பு
/
மாயமான நபர் காரில் சடலமாக மீட்பு
ADDED : ஜூலை 17, 2025 11:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை, கவுண்டம்பாளையம் சரவணா நகரை சேர்ந்தவர் ஜீவசங்கர், 35. மசாலா நிறுவன வினியோகஸ்தர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து, காரில் வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மொபைல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம், கே.என்.ஜி.புதூரில் உள்ள தனியார் பள்ளி ரோட்டில் ஜீவசங்கரின் கார், நீண்ட நேரமாக நிற்பதாக தகவல் கிடைத்தது.
காருக்குள் ஜீவசங்கர் இறந்த நிலையில் காணப்பட்டார். துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.