தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காணாமல் போன வாலிபர் ஆற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன வாலிபர் ஆற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன வாலிபர் ஆற்றில் சடலமாக மீட்பு


UPDATED : அக் 28, 2026 10:41 PM

ADDED : அக் 28, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 10:41 PM ADDED : அக் 28, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆலாந்துறை: முள்ளாங்காட்டை சேர்ந்தவர் சின்னராஜ்,26; கூலித்தொழிலாளி. இவர் கடந்த 25ம் தேதி, சீங்கப்பதியில் நடந்த உறவினரின் பூப்பு நீராட்டு விழாவிற்கு சென்றுள்ளார். பைக்கில் பெட்ரோல் இல்லாததால், பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு, சப்பாணிமடை வழியாக, நொய்யல் ஆற்றை கடந்து, முள்ளாங்காட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். மறுநாள் வரை வீட்டிற்கு வந்தடையவில்லை.

சின்னராஜின் தாய் மல்லிகா காருண்யா நகர் போலீசில் புகார் அளித்தார். காருண்யா நகர் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் செம்மேடு, நொய்யல் ஆற்றில் சின்னராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆலாந்துறை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நீரில் அடித்து செல்லப்பட்டு சின்னராஜ் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us