/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் மியாவாக்கி வனம் 2,000 மரக்கன்றுகள் நடவு
/
பள்ளியில் மியாவாக்கி வனம் 2,000 மரக்கன்றுகள் நடவு
ADDED : அக் 19, 2024 11:29 PM

கோவை: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி மற்றும் சிறுதுளி அமைப்பு சார்பில், மியாவாக்கி முறையில் கே.சி.டபிள்யு., வனம் ஏற்படுத்தும் நோக்கில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோவை புலியகுளம் பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கல்லுாரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி கூறியதாவது:
கல்லூரியின் நிறுவனர் சந்திரகாந்தியின், 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவியர், பேராசிரியர்கள் சிறுதுளி அமைப்புடன் இணைந்து, 2,000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மரமாகும் வரை மாணவியர் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பர். வரும் தலைமுறையினரும் மகிழ்வோடும் நலத்தோடும் வாழ வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.
சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.