/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடைக்கு எதிராக கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
/
மதுக்கடைக்கு எதிராக கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : ஜூலை 16, 2025 10:44 PM
கோவை; சோமனுார் வாரச்சந்தை, சுகாதார நிலையம், தேவாலயம் அருகே டாஸ்மாக் மதுக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி கலெக்டரிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கருமத்தம்பட்டி நகராட்சி சோமனுார் வாரச்சந்தைக்கு தெற்கே, மில் சாலை மீனாம்பிகா தியேட்டர் அருகே, புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சோமனுார், 27வது வார்டுக்குட்பட்ட பகுதியில், இரண்டு மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இந்த மதுக்கடைகளுக்கு அருகே, வாரம் இரு முறை இயங்கும் வாரச்சந்தை செயல்படுகிறது. அதோடு அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், தேவாலயம் ஆகியவையும் உள்ளன.
இவற்றிற்கு அருகே மதுக்கடை திறந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும். அதனால் மதுக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,கொள்கை பரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.