/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதிரி சூரியசக்தி திட்டம்; 5 கிராமங்கள் தேர்வு; அதிக உற்பத்திக்கு ஒரு கோடி ரூபாய் மானியம்
/
மாதிரி சூரியசக்தி திட்டம்; 5 கிராமங்கள் தேர்வு; அதிக உற்பத்திக்கு ஒரு கோடி ரூபாய் மானியம்
மாதிரி சூரியசக்தி திட்டம்; 5 கிராமங்கள் தேர்வு; அதிக உற்பத்திக்கு ஒரு கோடி ரூபாய் மானியம்
மாதிரி சூரியசக்தி திட்டம்; 5 கிராமங்கள் தேர்வு; அதிக உற்பத்திக்கு ஒரு கோடி ரூபாய் மானியம்
ADDED : ஜூன் 27, 2025 09:29 PM
பொள்ளாச்சி; அதிக அளவு சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் ஒருகிராமத்தை 'மாதிரி சூரியசக்தி கிராமம்' தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர். தேர்வு செய்யும் 'மாதிரி சூரிய சக்தி கிராமத்துக்கு' ஒரு கோடி மானியமாக வழங்கப்பட உள்ளது.
பிரதமரின் சூரியவீடு இலவச மின்திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு நாடு முழுக்க பயனளிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது.
மானியமாக ஒரு கி.வாட்டுக்கு, மேற்கூரை சூரியதகடு அமைத்தால்-, 30,000 ரூபாயும், 2 கிலோ வாட்டுக்கு, 60,000 ரூபாயும், 3 கிலோ வாட்டுக்கு, 78,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒரு கி.வாட் மேற்கூரை சூரியதகடு, ஒருநாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீட்டை குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம். இத்திட்டத்துக்கு வங்கிகடன் வழங்கப்படுகிறது.
மேலும், மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்டபணிகள் முடிவுற்ற, 7 நாட்களிலிருந்து, 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை www. pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு 'மாதிரி சூரிய சக்தி கிராமம்' கலெக்டர் வாயிலாக தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட மாதிரி சூரியசக்தி கிராமத்துக்கு, ஒரு கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வாயிலாக மக்கள் தொகை 5,000த்துக்கும் அதிகமாக உள்ள, அரசூர், சொலவம்பாளையம், புரவிபாளையம், தீத்திபாளையம், கொண்டயம்பாளையம் ஆகிய ஐந்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து, 6 மாதங்களுக்குள் போட்டி முறையில் அதிகமான சூரியசக்தி மயமாக்கல் செய்யும் ஒரு கிராமம் 'மாதிரி சூரியசக்தி கிராமம்' தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் 'மாதிரி சூரிய சக்தி கிராமத்துக்கு' ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை பிற கிராம மக்கள்பயன்படுத்தி பயனடையலாம்.
இது குறித்து கோவை கலெக்டர் கூறுகையில்,''இது போன்ற வாய்ப்புகளை கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது நல்ல தொழில் நுட்பமாகும்,'' என்றார்.