/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிக்கானி குளோபல் அகாடமி பள்ளியில் நவீன கல்விமுறை
/
கிக்கானி குளோபல் அகாடமி பள்ளியில் நவீன கல்விமுறை
ADDED : ஜூன் 09, 2025 10:38 PM

கோவை; பச்சாபாளையம், கிக்கானி குளோபல் அகாடமி, பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப கற்றலை வழங்கும் நோக்கில், மெட்டாசேஜ் அலையன்ஸ் கன்சல்டிங் எக்ஸ்பர்ட்உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இதன் வாயிலாக, பள்ளியில் அதிநவீன இன்னோவேஷன் லேப் உருவாக்கப்படும். மாணவர்கள் நேரடி அனுபவம் வாயிலாக, புதிய தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இதனால் ஏற்படுகிறது.
கிக்கானி குளோபல் அகாடமியின் தாளாளர் துஷார் கிக்கானி பேசுகையில், ''புதிய ஒப்பந்தம் வாயிலாக, உலக அளவிலான நவீன தொழில்நுட்பங்களை வகுப்பறைக்குள் கொண்டு வர முடியும். செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் கற்று, எதிர்காலத் தேவைகளுக்கு தயாராக முடியும்,'' என்றார்.
கிக்கானி குளோபல் அகாடமி முதல்வர் சாலினி நாயர்,மெட்டாசேஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., அகிலா,நிர்வாக இயக்குனர் அனுஷ் ஜெயகுமார், துணை பொது மேலாளர் வசந்தசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.