/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு
/
வெளிநபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு
ADDED : மே 18, 2025 10:07 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, வாகன தணிக்கை, இரவு ரோந்து அதிகரிப்பு, சரித்திர பதிவேடுகளில் உள்ள ரவுடிகள் குறித்து கண்காணிப்பு என போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் எப்போதும் வரும் வியாபாரிகள் இல்லாமல், வீடாக வீடாக விற்பனை செய்ய வரும் வெளிநபர்கள், விடுதிகளில் தங்கியுள்ளவர்கள், தோட்டத்து வேலைக்கு வரும் புதிய நபர்கள் என இவர்களது விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
தங்களது பகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் யாரேனும் வந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'. இவ்வாறு அவர் கூறினார். இதே போல் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்கள், தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற இணையம் வாயிலாக சேகரிக்கப்படுகிறது.