/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு
/
அன்னுாரில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு
ADDED : அக் 25, 2025 12:26 AM

அன்னுார்: அன்னுாரில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
அன்னுாரில், கோவை சாலையில், ராஜீவ் வீதி, ஆசாத் வீதி, மாரியப்பா காலனி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் ஆகிய இடங்களில் குரங்குகள் அதிக அளவில் திரிகின்றன. நேற்று மதியம் ராஜீவ் வீதியில் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து உணவு பொருட்களை எடுத்தபடி குழந்தைகளை மிரட்டின.
இதை பார்த்து பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். குச்சியை எடுத்து விரட்டும்போது குரங்குகள் எதிர்த்து வந்ததால் மக்கள் அச்சத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து உடனடியாக அன்னுார் பேரூராட்சி அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
கு ரங்குகளால் குழந்தைகளை வெளியே விட முடிவதில்லை. குரங்குகள் அதிகரித்து விட்டன. பேரூராட்சி நிர்வாகம், வனத்துறை வாயிலாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ் வீதி மக்கள் தெரிவித்தனர்.

