/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாரலாக மாறிய பருவமழை; நீர்வரத்து சரிவு
/
சாரலாக மாறிய பருவமழை; நீர்வரத்து சரிவு
ADDED : ஜன 01, 2025 05:53 AM

வால்பாறை : வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. தொடர் மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை ஜூலை மாதம், 19ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதேபோல், காடம்பாறை அணை நிரம்பியதையடுத்து, மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், வால்பாறையில் தென்மேற்குப்பருவமழை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தீவிரமடைந்த நிலையில், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையும் நிரம்பின.
அதன்பின், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு சாரல்மழையாக மட்டுமே உள்ளது.
சமவெளிப்பகுதியிலும் மழை தீவிரமடையாததால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.