/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் திட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
/
விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் திட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் திட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் திட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
ADDED : நவ 12, 2025 10:55 PM

பெ.நா.பாளையம்: தமிழக விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
விவசாயத்தை அழித்து, மனிதர்களை தாக்கும் காட்டுப் பன்றிகளை ஒழிக்கவும், யானைகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்,பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். வேலுசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கேரளாவில் வழங்குவதைப் போல தமிழக விவசாயிகளுக்கும் மாதாந்திர பென்ஷன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் தடாகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் யானைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேளாண் பயிர்களை அழிப்பதோடு வீடுகளுக்குள் புகுந்து சேதத்தை யானைகள் ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்தோடு வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யானைகள் பிரச்சனைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி கிடைத்தும், வனத்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை சொந்த செலவில் மின்வேலி அமைக்க தமிழக அரசு வலியுறுத்துவதை தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை தவறாமல் சேர்க்க வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யும் சாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்றும் வரை, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். இடி, மின்னல் தாக்கல், பாம்பு கடித்து விவசாய பணிகளின் போது இறக்கின்ற விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், 10 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் தற்போது சீராக வழங்கப்படுவதில்லை. உடனடியாக சரி செய்து சீராக வழங்க வேண்டும்.
ஏற்கனவே நான்கு போக்குவரத்து சாலைகள் இருக்கும்போது தேவையில்லாமல் மத்தம்பாளையத்தில் நிறைவடையும் கிழக்கு புறவழி சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

