sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகை பறிப்பு நாடகம் ஆடிய பெண்

/

நகை பறிப்பு நாடகம் ஆடிய பெண்

நகை பறிப்பு நாடகம் ஆடிய பெண்

நகை பறிப்பு நாடகம் ஆடிய பெண்


ADDED : நவ 12, 2025 10:56 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை அருகே பெள்ளாதி குளம் வழிப்பாதையில் சென்ற போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தனது நகைகளை பறித்து சென்றதாக 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை செக் செய்த போது, அவ்வாறு நடக்க வில்லை என தெரியவந்தது.

மேலும், அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய கிடிக்குபிடி விசாரணையில், அவர் நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.---

120 கிலோ குட்கா பறிமுதல் காரமடையில் ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

காரமடை போலீசார் நேற்று பெரியபுத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 120 கிலோ குட்கா மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை கடத்திக் கொண்டு வந்த திருப்பூர் மற்றும் அன்னூரை சேர்ந்த மனோகரன், 35, சல்மான், 32, ஜான்சன், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.---

சாலை விபத்தில் தொழிலாளி பலி மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ மனோகரன், 42; கூலி தொழிலாளி. இவர் சிறுமுகை பாலப்பட்டி ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த பிக்கப் வாகனம் மீது நிலை தடுமாறி மோதினார். இதில் ராஜமனோகரன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.---

முதியவர் பலி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்தி மேடு, நேரு நகரில் வசித்தவர் செல்லப்பா, 68; கூலி தொழிலாளி. சம்பவத்தன்று கோவை மேட்டுப்பாளையம் ரோடு, சாந்தி மேடு அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதி செல்லப்பா பலத்த காயம் அடைந்தார். பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்லப்பாவின் மகன் நிர்மல் புகார் செய்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வீரபாண்டியைச் சேர்ந்த பரத்,20, என்பவரிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us